×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தபால் பெட்டியை, அபேஸ் செய்து தென்காசி நபர் செய்த செயல்.. வீடியோ எடுத்த மக்கள்.!

தபால் பெட்டியை, அபேஸ் செய்து தென்காசி நபர் செய்த செயல்.. வீடியோ எடுத்த மக்கள்.!

Advertisement

தபால் பெட்டி அபேஸ்

தென்காசி மாவட்டத்தின் மேலகரம் பகுதியில் இருக்கும் தபால் நிலையம் முன்பாக இருந்த தபால் பெட்டியை மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேற்று எடுத்துக் கொண்டு சாலைகளில் நடந்து சென்றார். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து தபால் பெட்டியை பிடுங்க அவர்கள் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தன.ர் ஆனால் முடியவில்லை.

போலீசார் மீட்பு

ஒரு கட்டத்தில் இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்து தபால் பெட்டியை மீட்டனர். பின்னர், மேலகரம் தபால் நிலையத்திற்கு கொண்டு சென்று வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தபால் பெட்டியை தூக்கிக்கொண்டு சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரின் இந்த செயலால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதையும் படிங்க: பள்ளிக்கு லேட்டாக வந்த சிறுமி.. கூறிய காரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி.! கோவையில் கொடுமை.!

இதையும் படிங்க: போக்ஸோவில் கைதான த.வெ.க நிர்வாகி.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thenkasi #men #left #post box
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story