×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலீசார் விசாரணையின் போது ஆக்ரோஷமாக பேரிகார்டை முட்டி கீழே தள்ளிய இளைஞர்.! வைரல் வீடியோ.!

Theni youth hit police barricade by head while checking

Advertisement

தேனி மாவட்டத்தில்  போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டபோது இளைஞர் ஒருவர் போலீசாரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேரிகார்டில் ஆக்ரோஷமாக முட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் அடுத்த பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.

அப்போது லெட்சுமிபுரத்தை சேர்ந்த தினகரன் (26) என்ற இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஊரடங்கு சமயத்தில் எங்கே சென்று வருகிறீர் என கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தள்ளிவிட்டுள்ளார்.

இளைஞரின் செயலால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்? வாகனங்களை ஏன் தள்ளிவிட்டீர்கள் என கேட்டுக்கொண்டிருந்தபோதே மீண்டும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சாலையின் நடுவே இருந்த பேரிகார்டை தலையால் முட்டி கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த மற்றொரு பேரிகார்டில் தலையை முட்டி காயம் ஏற்படுத்த முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#lockdown
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story