×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புரோட்டா மாஸ்டரின் பூட்டிய வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்! 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில்.... வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காணாமல் போன பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். பணத் தகராறில் கொலை செய்ததாக புரோட்டா மாஸ்டர் கைது.

Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கடந்த 9-ம் தேதி காணாமல் போன அம்சவள்ளி (38) என்ற பெண், சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக தேனியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் அப்துல் ரகுமான் (36) கைது செய்யப்பட்டுள்ளார். பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறில் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செல்போன் அழைப்பு மூலம் கிடைத்த துப்பு

வீட்டை விட்டு சென்ற அம்சவள்ளி மீண்டும் திரும்பாததால், அவரது மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அம்சவள்ளியின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக அப்துல் ரகுமானிடம் பேசியது தெரியவந்தது.

இதையும் படிங்க: போடு வெடிய... ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000, வேட்டி, சேலை....! அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்...!!!

பூட்டிய வீட்டில் வீசிய துர்நாற்றம்

இதனிடையே அப்துல் ரகுமான் வசித்து வந்த பூட்டிய வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சோதனை நடத்தியபோது, சாக்கு மூட்டையில் அம்சவள்ளியின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தன.

பணத் தகராறில் கொலை; 3 நாட்கள் வீட்டிலேயே இருந்ததாக தகவல்

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்போன் மூலம் அறிமுகமான இருவருக்கும் இடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அப்துல் ரகுமான், அம்சவள்ளியை கல்லால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு உடலை வெளியே கொண்டு செல்ல முடியாததால், சாக்கு மூட்டையில் கட்டி அதே வீட்டில் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் மூன்று நாட்கள் சடலத்துடன் வீட்டில் இருந்ததாக கூறப்படும் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்... கதவை உடைத்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தேனி கொலை #Periyakulam murder #அம்சவள்ளி #Abdul Rahman #பணத் தகராறு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story