×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி புறப்பட்ட மகன்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி புறப்பட்ட மகன்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Advertisement

செய்யாறு வைத்தியர் தெருவில் வசித்து வருபவர் கோபு. இவருக்கு ஹரிபிரகாஷ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிபிரகாஷ் பாரிநகர் பகுதியில் இருந்து செய்யாற்றில் உள்ள தனது வீட்டிற்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஹரி பிரகாஷ் சென்ற வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஹரிபிரகாஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த ஹரிபிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக ஹரிபிரகாஷின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #died #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story