×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு... இளைஞர்களின் அசாத்திய தைரியத்தால் அதிர்ச்சி...!

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு... இளைஞர்களின் அசாத்திய தைரியத்தால் அதிர்ச்சி...!

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே, மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்தது, அதை பிடித்து இளைஞர்கள்  எடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகில் கீழ்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் ஒரு வினோத சத்தம் கேட்டுள்ளது. கிராம மக்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து டார்ச் லைட் அடித்துப் பார்த்த போது அங்கு மலைப் பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து சென்றுள்ளது. 

இதனைக் கண்ட கிராம மக்கள் சத்தம்போட்டதால், அங்கு ஊரில் உள்ள  இளைஞர்கள் திரண்டனர். அதில் ஒரு சிலர் மலைப்பாம்பை அழகாக பிடித்து தங்களது தோள்களின் மீது போட்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர், மலை பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.  மலை பாம்பு திடீரென ஊருக்குள் புகுந்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Krishnagiri #The python that entered the Village
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story