×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய முதியவர்! தொகை எவ்வளவு தெரியுமா?

The old man who begged and donated corona funds

Advertisement

தூத்துக்குடி மாவட்டம ஆலங்குளத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன். உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவரான இவர், நாடோடியாக நகர்ந்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை வந்த அவர், பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நடைபாதையில் வசித்து வந்துள்ளார்.

இவர் இதுவரை 10 முறை தலா ரூ. 10 ஆயிரம் விதம் 1 லட்சம் ரூபாய் வரை கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளார். இந்த தொகையினை அவர் பிச்சை எடுத்தே வழங்கி உள்ளார். பிச்சை எடுத்து, அந்தப்பணத்தை கொரானாவுக்காக வழங்கிய பூல்பாண்டியின் சேவையை பாராட்டி, அவரை கவுரவிக்கும் வகையில், சிறந்த சமூக சேவகருக்கான விருதை அவருக்கு மாவட்ட ஆட்சியர் வினய் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பும் தான் பிச்சையெடுத்த பணத்தின் பெரும்பகுதியை பள்ளிகளுக்கு நாற்காலி வாங்க வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் தான் பிச்சையெடுத்து பணத்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாளன்று அரசு பள்ளிக்கு வழங்குவேன். விருதுக்காகவோ, பாராட்டுக்காகவோ நான் கொரோனா நிதி வழங்கவில்லை. மேலும் கொரோனா முடியும் வரை தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona funds #begging old man
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story