வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்... ராமநாதபுரத்தில் பயங்கரம்...!
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்... ராமநாதபுரத்தில் பயங்கரம்...!
ராமநாதபுரம் அருகே இரண்டு முறை குண்டாசில் சிறை சென்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகில் உள்ள காட்டு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் பிரபாகரன் மகன் பக்கா (எ) பிரபுதேவா (28). இவர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் பிரபு தேவா நேற்று இரவு தூங்கச் சென்றார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் பிரபுதேவா வெளியே வராததால், அவரது தாயார் அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பிரபுதேவா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் தாய், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுதேவாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இந்த படுகொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.