×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடல் நீரை உறிஞ்சி இழுத்த மேக கூட்டம்!. அதிர்ச்சியில் உறைந்த மீனவர்கள்: வைரலாகும் போட்டோக்கள்..!!

கடல் நீரை உறிஞ்சி இழுத்த மேக கூட்டம்!. அதிர்ச்சியில் உறைந்த மீனவர்கள்: வைரலாகும் போட்டோக்கள்..!!

Advertisement

"நீர்த்தாரைகள்" என்னும் அதிசய நிகழ்வு, கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், ஏற்படும்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் ஆலம்பாறை என்ற இடத்திலிருந்து கடலுக்குள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, வானில் இருந்து மேகங்கள் திடீரென தாழ்வாக கடல் அருகே இறங்கியது. சிறிது நேரத்தில் கடல்நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. 

மீனவர்கள் இந்த வினோத காட்சியை பார்த்து ஆச்சரியமடைந்தனர். சுமார் அரை மணிநேரம் மேகக் கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சிய இந்த அரிய காட்சியை மீனவர்கள் அவர்களது செல்போனில் வீடியோ மற்றும் படம் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்த சம்பவம் பற்றி துறைமுக அதிகாரியிடம் கேட்டபோது, பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது, கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, "நீர்த்தாரைகள்" மறைந்து விடும். 

இந்த நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இதுபோன்ற நிகழ்வுகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிக அளவில் நிகழும் என்றார். மரக்காணம் கடல் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Water body #Karaikal #fisherman #Humidity in Air
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story