×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா!! ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடிய கும்பல்.. கார் பங்களா என சொகுசு வாழ்க்கை.. பெண் உட்பட 3 பேர் கைதான சம்பவம்..!

அடேங்கப்பா!! ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடிய கும்பல்.. கார் பங்களா என உல்லாச வாழ்க்கை.. பெண் உட்பட 3 பேர் கைதான சம்பவம்..!

Advertisement

சென்னை பல்லாவரம் அருகே கடந்த சில மாதங்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருட்டு போவதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகல்கேணி ஆதம் நகரில் வசித்து வரும் சின்ன பொன்னன் என்பவர் தனது ஆடுகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்ன பொன்னன் என்பவர் ஆடுகளை அதிகளவில் வாங்கி வளர்த்து வந்துள்ளார். இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மேச்சலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த ஆடுகளை மர்ம‌‌நபர்கள் காரில் திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சின்ன பொன்னன் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனகாபுத்தூரில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் ஆடுகளை திருடிச் சென்ற கார் நின்றிருந்ததை கண்ட போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்தக் காரானது அனகாபுதூரை சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான கார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஜெயக்குமார் சரோஜினி என்ற பெண்ணின் துணையோடு அந்த காரில் இதுவரை ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடியதும் அவற்றை விருகம்பாக்கத்தில் உள்ள பரூக் என்ற கறிக்கடைக்காரரிடம் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Goat theft #The trapped gang #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story