×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10th & +2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நேரத்தில் வெளியீடு: 10 வகுப்பு தேர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தல்..!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நேரத்தில் வெளியீடு: 10 வகுப்பு தேர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தல்..!

Advertisement

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பில்  மொத்தம் 94.07 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண் விபரங்களை காலை 10 மணி முதல் மாணவர்கள் இணைய தளங்களில் பார்க்கலாம்.

எஸ்.எம்.எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். மேலும், tnresults.nic.in, dge.tn.gov.in
dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம்தேர்வு முடிவுகளை அறியலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டம் 92.82% தேர்ச்சி பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#public exam #Exam result #Result 2022 #10th Standard #12th standard #anbil mahesh #school education
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story