×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி... நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கி மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு! தஞ்சை நெல் கிடங்கில் அலட்சியத்தால் பரிப்போன உயிர்...!!!

தஞ்சாவூர் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 51 வயதான பெண் தொழிலாளி உயிரிழந்தார். நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல் மூட்டைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழப்பு

ஆர். சுத்திப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு (51), அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் இடிந்து விழுந்தபோது அதன் இடுக்கில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருடன் பணியில் இருந்த சகுந்தலா என்ற பெண் தொழிலாளி பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்! 2 குழந்தைகள் பரிதாபமாக பலி.. 7 பேர் படுகாயம்! நாவலூரில் நடந்த பயங்கரம்!!!

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விபத்து எவ்வாறு ஏற்பட்டது, பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாக அலட்சியம் என குற்றச்சாட்டு

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரவைக்கு அனுப்பாமல் திறந்தவெளியில் நீண்ட நாட்களாக அடுக்கி வைத்திருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் கனமழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்த விவகாரம் இன்னும் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பது அதிருப்தியை அதிகரித்துள்ளது.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு விரைந்து மாற்றி அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: # BREAKING: கல்குவாரியில் பெரிய பாறை சரிந்து விழுந்து 8 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி...! பணியின்போது நேர்ந்த சோகம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #Paddy Bags Collapse #TNCSC #நெல் மூட்டைகள் #Tamil Nadu News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story