நொடியில் லாரி மோதி நொறுங்கிய குடும்பம்! அம்மாவும், 2 பிஞ்சு குழந்தைகளும் பலி...! மூத்த மகன் தீவிர சிகிச்சையில்... தஞ்சையில் பெரும் சோகம்!!!
தஞ்சாவூர் அம்மன்பேட்டையில் லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழந்தனர். மற்றொரு மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை பகுதியில் லாரி மோதிய விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சை மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த பெனாசிர் பேகம் (26), தனது மூன்று மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு திட்டமா..? ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? முதல்வர் விஜய்யின் போடும் மாஸ்டர் பிளான்..!!!
எதிரே வந்த லாரி மோதி விபத்து
திருவையாறு – தஞ்சை சாலையில் அம்மன்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதில் பெனாசிர் பேகம் மற்றும் அவரது மகன்களான முகமது ஜாசித் (10), முகமது ஹாலித் (5) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூத்த மகன் முகமது ஜாவித் (12) படுகாயமடைந்தார்.
மூத்த மகனுக்கு தீவிர சிகிச்சை
விபத்தில் காயமடைந்த முகமது ஜாவித் மீட்கப்பட்டு, திருவையாறு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நடுகாவேரி காவல்துறையினர், உயிரிழந்த தாய் மற்றும் இரண்டு சிறுவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரி மோதியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.