எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள்... தஞ்சாவூரில் பரபரப்பு.!
எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள்... தஞ்சாவூரில் பரபரப்பு.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வீதியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல், எம்.ஜி.ஆர் சிலையை உடைக்க முயற்சித்துள்ளது.
ஆனால், சிலையை உடைக்க முடியாத காரணத்தால், சிலையின் பீடத்தை பெயர்த்து சிலையை தூக்கி வீசி தப்பி சென்றுள்ளனர். இன்று காலை நேரத்தில் அப்பகுதி வழியாக சென்ற மக்கள், எம்.ஜி.ஆர் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில், அதிமுகவினருக்கும் தகவல் தெரியவந்து சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.