பூங்காவை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய தமிழிசை சவுந்தரராஜன்.!
கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019

கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானாவின் 2-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உதிர்ந்து விழுந்த மரங்களின் இலைகள் மற்றும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் கிடந்துள்ளது. இதனையடுத்து, அந்த பூங்காவை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனையடுத்து, என்.எஸ்.எஸ். மற்றும் தன்னார்வலர்கள் புதுவை தாவரவியல் பூங்காவை நேற்று சுத்தப்படுத்தினர். இந்த பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். அப்போது அவரும் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த தூய்மைப்படுத்தும் பணியில் பல மாணவ, மாணவிகளும் ஈடுபட்டனர்.