×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெருமாள் கோவிலில் அர்ச்சகர் உல்லாசம்... இன்டர்நெட்டில் வைரலான வீடியோ.!!

பெருமாள் கோவிலில் அர்ச்சகர் உல்லாசம்... இன்டர்நெட்டில் வைரலான வீடியோ.!!

Advertisement

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள திருவெள்ளறை பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் நான்காவது திருத்தலமாகப் போற்றப்படுகிறது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இக்கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் வந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இணையத்திலும் பக்தர்களுக்கிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது இந்த சம்பவம் நடந்தது உண்மையென தெரியவந்து இது குறித்து விளக்கமளித்த சுரேஷ் தனக்கு திருமணமாகவில்லை என்றும் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பிறகு சுரேஷை உடனடியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பணிமாற்றம் செய்து அவரை தனது நேரடி மேற்பார்வை கீழ் கொண்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க: 10 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்ற அரசு பள்ளி ஹெட் மாஸ்டர்! மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்! தமிழகத்தில் நடந்த அதிர்ச்சி....

திருவெள்ளறை சம்பவ அதிர்ச்சி நீங்கும் முன்னரே தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் மற்றொரு அதிர்ச்சி  நிகழ்வு அரங்கேரியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலின் இணை கோவிலான இங்கு 75 வயது அர்ச்சகர் விஸ்வநாதன் என்பவர் 13 வயது சிறுமியிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. காணிக்கை செலுத்த சென்ற சிறுமியிடம் அர்ச்சகர் தவறாக நடக்க முயன்றதை கண்டு சிறுமி கதறியுள்ளார். பெற்றோரின் புகாரை தொடர்ந்து கும்பகோணம் மகளிர் காவல்துறையினர் 75 வயதான அர்ச்சகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... அர்ச்சகர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #tiruchirapalli #Crime #sexual abuse #Priest Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story