×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோயில் திருவிழா தகராறில் சோகம்.. தனியாக சிக்கிய இளைஞரை அடித்துக்கொன்று கிணற்றில் வீசிய அவலம்.. வேலூரில் பரபரப்பு.!

Vellore News: திருவிழாவில் ஏற்பட்ட சண்டையில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

ஊர்மக்களை ஒன்றிணைக்கும் திருவிழாவை மையமாக வைத்து, இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறு கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது.

இரண்டு பகுதி இளைஞர்கள்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, கல்புதூரில் ஜூன் 21ம் தேதியன்று இரவில் கெங்கையம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவில் வண்டறந்தாங்கல் பகுதி இளைஞர்களுக்கும் - கல்புதூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. திருவிழா முடிந்ததும் சுந்தரியம்மன் கோயில் மைதானத்தில் கல்புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.! 

தனியாக சிக்கினார்:

அப்போது, அங்கு கத்தி, தடியுடன் வந்த வண்டறந்தாங்கல் இளைஞர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் கல்புதூரைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் தினகரன் (வயது 21) தனியாக சிக்கி இருக்கிறார். இதனால் அவரை வண்டறந்தாங்கல் இளைஞர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின் தினகரன் மாயமானார்.

கொலை:

இதுகுறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, தினகரனை 10 இளைஞர்கள் துரத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வண்டறந்தாங்கலைச் சேர்ந்த நவீன் (வயது 23), ஜீவா (வயது 21), சக்தி தரன் (வயது 24), சசிகுமார் (வயது 27), நரசிம்மன் (வயது 19) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. தினகரனின் சடலம் அங்கிருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இதையும் படிங்க: மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vellore #Crime news #Murder #திருவிழா கொலை #காட்பாடி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story