சின்னப்பசங்கன்னு ஓவரா பண்றான்.. முகம் சிதைத்து இளைஞர் கொடூர கொலை.. 16 வயது சிறார்கள் வெறிச்செயல்.!
Salem News Today: சிறார்களை உதாசீனப்படுத்தி வந்த இளைஞரை கொலை செய்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
மதுபோதையில் 16 வயதுடைய 3 சிறார்கள் இளைஞரை கொலை செய்துள்ளனர்.
பேஸ்புக் நண்பர்கள்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில், 3 சிறார்கள் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் சம்பவத்தன்று இருந்துள்ளனர். இந்த சிறுவர்களில் 16 வயதாகும் இருவர், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்கள். இவர்களுடன் இதே பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவரும் பேஸ்புக் மூலம் நண்பராகி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!
மதுபோதை:
நண்பர்களான மூவரும் இளம் வயதிலேயே மதுபோதைக்கு பழக்கமாகி, அவ்வப்போது சேர்ந்து மதுபானம் அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களுடன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வரும் 19 வயது கோகுல் என்பவரும் சேர்த்துள்ளார். இதனிடையே, போதை தலைகேறியபின் கோகுல் - 3 சிறார்கள் இடையே வாய்த்தகராறு உண்டாகி இருக்கிறது.
கொடூர கொலை:
அப்போது, ஆத்திரமடைந்த சிறார்கள் கோகுலை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியையும் எடுத்து இளைஞரை குத்தி இருக்கின்றனர். கொடூரமாக முகத்தை சிதைத்து கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. பின் உடலை தரையில் போட்டு ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்டு இதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.
அம்பலமான சம்பவம்:
சத்தம் கேட்டு பதறிப்போன மக்கள் ஒன்று திரண்ட நிலையில், சிறார்கள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். மக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, போதைக்காக அவ்வப்போது ஒன்றுசேரும் சிறார்கள், சம்பவத்தன்று கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. கோகுல் சிறார்களை உதாசீனப்படுத்தி வேலை வாங்கி வந்த நிலையில், 16 வயது சிறுவனின் சிகிரெட் பழக்கத்தை பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதனால் சிறார்கள் கோபத்தில் இருந்த நிலையில், சம்பவத்தன்று குடிக்கும்போது கோகுல் சிறார்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதால் வந்த ஆத்திரத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளது.
கைதான 3 சிறார்களும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சொந்த பேத்தியை சீரழித்து கொன்ற தாத்தா.. நெஞ்சை திடுக்கிடவைக்கும் துயரம்.!