வானிலை எச்சரிக்கை ... 24 மணி நேரத்திற்குள்.." அதி தீவிர புயல் உருவாக வாய்ப்பு"..!!
tamilnadu will get rain for next 24 hours..

அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமான புயலாக உருமாறும் என தகவல்..
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக மாறி கரையைக் கடக்குமா, சென்னைக்கு மழை கிடைக்குமா, தட்டுபாடில்லாமல் வருகின்ற கோடை காலத்தை சமாளிக்க முடியுமா என்ற எண்ணங்கள் சென்னை வாசிகள் மத்தியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சென்னையை நோக்கி பெதாய் என்ற புயல் நகர்ந்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி தற்போது,
இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 750 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கும் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1210 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புயல் குறித்த தொடர்ச்சியான தகவல்களை தமிழக பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் இணையதளம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது