பள்ளிக்கல்வி இயக்குனரின் அதிரடி உத்தரவு; பள்ளி மாணவர்கள் துள்ளி குதிப்பு.!
tamilnadu school education - director announcement

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது வெயிலின் கொடுமை உச்சம் தொட்டுள்ளது இனி வரும் தினங்களில் சொல்லவே தேவையில்லை. எனவே தான் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நடைமுறையை தமிழகம் பின்பற்றி வருகிறது.
ஆனால் சில பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விடுமுறை காலங்களில் எந்த பள்ளியும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.