×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

TASMAC தெரியும்.. அதென்ன JUICE MAC?.. விளம்பர யுக்தியில் திணறவைத்த "பழரசபானக்கடை"..!

TASMAC தெரியும்.. அதென்ன JUICE MAC?.. விளம்பர யுக்தியில் திணறவைத்த பழரசபானக்கடை..!

Advertisement

தமிழகத்தில் டாஸ்மாக் என்றால் வாயில் விரலை வைத்து சூப்பும் குழந்தைகளும் சொல்லிவிடும் என்ற நிலைதான் இன்று உள்ளது. குடிகார தகப்பனுக்கு பிள்ளைகளாக பிறந்து, தந்தையை மழலை மொழியில் குடிக்காதே என்று கண்டிக்கும் பிள்ளைகள் வந்துவிட்டார்கள். ஆனால், இந்த அகம்பாவ எண்ணம் கொண்ட ஆறடி மனிதன் தான் திருந்த மறுக்கிறான்.

சரி விசயத்திற்கு செல்லலாம். மதுபானம் உயிருக்கு கேடு தரும், அது உடலையும், எதிர்காலத்தையும் சீரழிக்கும் என்று பல எச்சரிக்கை செய்தாலும் அதன் விற்பனை வருடத்திற்கு வருடம் அதிகமாகிக்கொண்டு தான் செல்கிறது. கோடைகாலத்தில் பீர், குளிர்காலத்தில் ரம், விஸ்கி, ஹாட் என சீசனுக்கு ஏற்றாற்போல குடித்து சீரழிந்து, எதிர்காலத்தையும் குடும்பத்தையும் தெருவில் நிறுத்தி வருகின்றனர். 

ஆனால், சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் கம்பங்கூழ், தர்பூசணி, கரும்புச்சாறு, இளநீர், பதநீர், வெள்ளரி என பழச்சாறுகளை பெரும்பாலும் விரும்புவது இல்லை. உடல்நலத்தை நன்கு தெரிந்தவர்கள் மட்டுமே இயற்கையை நாடுகின்றனர். மீதியெல்லாம் எதோ ஒரு காரணத்தை சொல்லி மதுவகைகளையே குடித்து வருகிறார்கள். இந்த சாராயக்கடை தமிழகத்தில் டாஸ்மாக் என அழைக்கப்படுகிறது.

டாஸ்மாக் தெரியும், ஜூஸ்மாக் தெரியுமா?.. கேட்கவே புதியதாக உள்ளதல்லவா?. டாஸ்மாக்கில் எப்படி மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறதோ, அதனைப்போல ஜூஸ்மாக்கில் பழச்சாறுகள் விற்பனை செய்யப்படுகிறது. கடையின் விற்பனையை வணிகரீதியில் பிரபலமாக்க உரிமையாளருக்கு தோன்றிய அரிய சிந்தனையே அதன் தலைப்பும் ஆகியுள்ளது. அதன் விளம்பர பலகையில், மதுபானக்கடை விளம்பரம் போலவே ஏற்படுத்தி, பழரசபானக்கடை, பழரசம் நாட்டிற்கும், வீட்டிற்கும், உடலுக்கும் நன்மை தரும் என்ற வாசகத்துடன் கடை எண் 1 என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தமிழக நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

TASMAC - உடல் நலத்திற்கு கேடு
JUICEMAC - உடல் நலத்திற்கு நன்மை

Note: Images are Representative 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Juicemac #tamilnadu #tasmac
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story