TN ALERT செயலி.. உங்க ஊர் வானிலையை ஃபோனிலேயே பெறலாம்.! உடனே டவுன்லோடு பண்ணுங்க.!
TN ALERT செயலி.. உங்க ஊர் வானிலையை ஃபோனிலேயே பெறலாம்.! உடனே டவுன்லோடு பண்ணுங்க.!
TN ALERT செயலி தமிழக அரசினால் உருவாக்கப்பட்ட அவசர மற்றும் ஆபத்துக் கால எச்சரிக்கைகளை அனுப்ப உருவாக்கப்பட்ட செயலியாகும். இந்த செயலியின் மூலம் இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள், பெரு வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, மழை முன்னெச்சரிக்கை போன்ற ஆபத்து காலங்களில் எச்சரிக்கை செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த செயலியானது, இயற்கையின் கால நிலைமாற்றங்கள், முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்க உதவுகிறது. இதனை நம் செல்பேசியில் நிறுவுவதன் மூலம், கனமழை, வெள்ளம் , புயல் ஆகிய இயற்கை சீரழிவுகளின் முன்னறிவிப்பு நம் செல்பேசிக்கு, முக்கிய அறிவிப்பாக உடனே வந்துவிடும்.
மேலும், மிக துல்லியமாக, நமது தற்போதைய இருப்பிடத்தை கணக்கில் வைத்து, எச்சரிக்கை தகவல்கள் வந்து சேருகிறது. நம் தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு மக்களுக்கு அனுப்பப்படுபவை.
இதையும் படிங்க: நம்பரை போனில் சேவ் பண்ணாமலே வாட்சாப்பில் இருந்து எப்படி மெசேஜ் அனுப்புவது தெரியுமா? இதோ..
மேலும், இயற்கை பேரிடர்காலங்களில் செய்ய கூடியவை, செய்யக்கூடாதவை என அறிவுரைகளும் உள்ளன. இந்த செயலியை பெற, GOOGLE PLAY STORE இல் ''TN ALERT '' என TYPE செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நமது மொபைல் எண்ணைக்கொடுத்து பதிவும் செய்து கொள்ளவேண்டும்.
முன்னெச்சரிக்கையாக நமது மொபைலில் PUSH நோட்டிபிகேஷன்ஸ் வைத்துக்கொண்டால் நமக்கு ஆபத்து காலங்களில் தகவல்கள் கிடைக்க பெற எளிதாக இருக்கும். மேலும், அருகில் இருக்கும் நிவாரண முகாம்கள், அவசர உதவி எண்களும் இதில் கிடைக்கப்பெறலாம்
இதையும் படிங்க: சாட்டை போல அடர்த்தி., கருகருவென நீண்ட முடி.! இதை செய்தால் பலன் நிச்சயம்.!