×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா நிவாரண பொருட்கள் வீடு தேடி வரும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Tamilnadu government announced about rescue amount

Advertisement

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்குநாள் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கிடையில்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்தனர். 

இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், இந்த மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் அதனுடன் நிவாரண நிதியாக ரூ.1000 வழங்குவதாகவும் அறிவிக்கபட்டிருந்தது. அதன்படி, நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது.

மேலும் நிவாரணப் பொருட்களை பெறும்பொழுது மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும்வகையில் டோக்கன் வழங்கபட்டது. ஆனாலும் நியாய விலைகடைகளில் கூட்டம் குவிய துவங்கியது. 

இந்நிலையில், தமிழக அரசு இன்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் 1000ரூபாய் பணம் வழங்கப்படாது. மேலும் அதற்கு பதிலாக வீடு வீடாக சென்று வழங்கப்படும். மேலும் ஏற்கனவே டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் கொரோனா  நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #Fund #ration card
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story