அடடே... இவ்வளவு தொகை அதிகரிப்பா! தமிழகத்தில் விபத்து மரண இழப்பீடு மற்றும் நிதி உதவி அதிகரிப்பு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
தமிழகத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண நிதி உதவி மற்றும் இறுதிச்சடங்கு செலவுத் தொகை உயர்வு அறிவிப்பு.
தமிழக அரசு நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் நலனுக்காக புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மரண இழப்பீடு மற்றும் நிதி உதவி தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
விபத்து மரண இழப்பீடு உயர்வு
இதுவரை ரூ.1 லட்சமாக இருந்த விபத்து மரண இழப்பீடு தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வலுவான ஆதரவாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை மரணம் மற்றும் இறுதிச்சடங்கு செலவுகள்
இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000 இலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இறுதிச்சடங்கு செலவுகளுக்கான உதவி ரூ.2,500 இலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்ச் 31 வரை ரேஷனில் இலவசமாக கிடைக்கும்.. தவற விடாதீர்கள்.!
அரசின் நோக்கம்
இந்த உயர்வுகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து, இறுதிச்சடங்கு செலவுகளை சுமுகமாக நிறைவேற்ற உதவும் என அரசு வலியுறுத்தியுள்ளது. சமூக நலனைக் கவனத்தில் கொண்டு அரசு எடுத்து வரும் இத்தகைய முடிவுகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் துணை புரிவதாகும்.
தமிழக அரசின் இந்த முடிவு, தொழிலாளர் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், வாழ்க்கையில் நிலைத்தன்மையையும் வழங்கும் ஒரு சிறந்த சலுகையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: Video : கையில் கயிறு மற்றும் தாயத்து கட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? ஆன்மிக அடிப்படையில் வாழ்வின் சிறப்பு!