×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு... நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழக அரசின் அதிரடி சர்ப்ரைஸ்! மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை சிரமமின்றி பெறும் வகையில் கூட்டுறவுத் துறை முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாட்களில் தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்க ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கே நேரடி ரேஷன் விநியோகம்

கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இந்தச் சிறப்பு திட்டத்தின் கீழ் தகுதியுடைய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட ரேஷன் பணியாளர்கள் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING : மகிழ்ச்சி செய்தி! அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு கல்லூரியில் சேரும்போது ரூ.8,000 அள்ளிக் கொடுக்கும் புதிய திட்டம்...! தமிழக அரசின் அல்டிமேட் பட்ஜெட் பிளான்...!!!!

ரேஷன் கடைகளில் முன்கூட்டியே அறிவிப்பு

இதையடுத்து, எந்த நாளில் எந்த பகுதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தெளிவான அறிவிப்புகளை வெளியிடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயனாளிகளுக்கு சிரமம் குறையும்

நடக்க முடியாத நிலை, உடல்நலப் பிரச்சினை அல்லது மாற்றுத்திறன் காரணமாக ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத பயனாளிகள் இந்த ஏற்பாட்டின் மூலம் நேரடியாக வீட்டிலேயே பொருட்களைப் பெற முடியும். இதனால் தகுதியான அனைவருக்கும் திட்டத்தின் பலன் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

இதையும் படிங்க: ஒன்று கூடி தாக்கிய சகஊழியர்கள்.. தப்பிக்க 4 வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. போராடி பறிபோன உயிர்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Ration #முதியோர் #Doorstep Delivery #மாற்றுத்திறனாளிகள் #Cooperative Department
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story