இந்த ஒரு காரணம்தான்! கொரோனா தங்களை தாக்காது என மக்கள் ரொம்பவும் நம்புறாங்க! வேதனையில் தமிழக கிரிக்கெட் வீரர்!
Tamilnadu cricket player tweet about coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதற்காக பல மாநில அரசுகளும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை மக்களுக்கு கொரோனா வைரஸ் எண்ணம் குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் அதனை சென்னை மக்கள் பெருமளவில் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களை கொரோனா வைரஸ் தாக்காது என்ற நம்பிக்கையில் உள்ளனர். அதற்கு காரணம் சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையே. அதனால் வைரஸ் பரவாது என மக்கள் பெருமளவில் நம்புகின்றனர் என பதிவிட்டுள்ளார்.