×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதெல்லாம் அ.தி.மு.க-வில் மட்டும் தான் நடக்கும்.! முதலமைச்சர் பழனிசாமி பரபரப்பு பேச்சு.!

தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Advertisement

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

அந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழக வரலாற்றிலேயே 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அமைத்தது அதிமுக தான். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் தொழிலதிபர்கள் கிடையாது, அனைவரும் சாமானியர்கள் தான். 

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள். தொண்டர்கள் கூட முதல்வராக கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க தான், நாளை நீங்களும் முதல்வராகலாம். இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். உயர்கல்வி படிப்போர் விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Admk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story