தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பா.? மொத்த இறப்பு மற்றும் பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
Tamil Nadu Today corona latest update

தமிழகத்தில் இன்று புதிதாக 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அன்றாட கொரோனா நிலவரம், பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு நாள்தோறும் தகவல்களை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று மேலும் 5,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதலாக இன்று ஒரே நாளில் 5,742 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,01,913 பேர் கொரோனானாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53,283 பேர் சிகிச்சையில் உள்ளனர்.