×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டாஸ்மாக் கடைகளில் அடுத்த சாட்டையை சுழன்றும் முதல்வர் விஜய்...! அரசு எடுத்த அதிரடி முடிவால்... அலறும் அதிகாரிகள்! சற்றுமுன் பறந்த உத்தரவு...!!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மேலும் 200 டாஸ்மாக் கடைகளை மூட அல்லது இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான விதிமீறல்களுக்கு எதிராக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்படும் கடைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மேலும் 200 கடைகள் சிக்கலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 717 மதுக்கடைகள் மூடல்

முதல்வர் விஜய் உத்தரவின் பேரில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை கடுமையாக அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... இந்த நாளன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது! தமிழக அரசு அறிவிப்பு!!!

மேலும், மதுபாட்டிலின் விலையை விட கூடுதலாக ₹10 வசூலிப்பதாக எழுந்த புகார்களிலும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பல கடைகளில் கூடுதல் கட்டண வசூல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புகார்களுக்கு உள்ளான மேலும் 200 கடைகள்

இருப்பினும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் சில கடைகள் தொடர்ந்து செயல்படுவதாக புகார்கள் வந்தன. இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தொடர் புகார்களுக்கு உள்ளான கடைகள் மற்றும் முக்கியமான பொது இடங்களுக்கு அருகில் செயல்படும் கடைகள் என மேலும் 200 டாஸ்மாக் கடைகளில் பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூடலா, இடமாற்றமா? அரசு ஆலோசனை

கண்டறியப்பட்டுள்ள இந்த 200 கடைகளையும் மூடுதல் அல்லது இடமாற்றம் செய்வது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொருத்தமான இடங்களுக்கு கடைகளை மாற்றுவதற்கும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அடுத்தகட்ட முடிவு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன.

அதேநேரத்தில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு குட் நியூஸ்.. டாஸ்மாக் பார்களில் வரப்போகும் புதிய வசதி! அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#டாஸ்மாக் கடைகள் #tasmac #விஜய் அரசு #மதுக்கடை மூடல் #tamil nadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story