BREAKING : பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 வாங்க கைரேகை பதிவு தேவையில்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு ரூ.3000 பெற கைரேகை தோல்வியெனில் கண் கருவிழி பதிவு மூலம் வழங்க அரசு அறிவிப்பு
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதியவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைரேகை பதிவு தோல்வியுற்றால், மாற்று முறையாக கண் கருவிழி பதிவு மூலம் தொகை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் ரூ.3000 விநியோகம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ரூ.3000 ரொக்க பணம் வழங்கப்படுகிறது. 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
விநியோக தேதி – கடைசி நாள் அறிவிப்பு
கடந்த 8-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நாளை வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் திரண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 உண்டு! ஆனால் இந்த அட்டைதாரர்களுக்கு மட்டுமே.... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!!!
முதியவர்களுக்கு கைரேகை சிக்கல்
பல முதியவர்களுக்கு கைரேகை சரியாக பதிவு செய்ய முடியாததால், பொங்கல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனால் ரேஷன் கடைகள் முன்பு குழப்பம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
கண் கருவிழி பதிவு மூலம் வழங்க அரசு அனுமதி
இந்த சிக்கலுக்கு தீர்வாக, கைரேகை சரியாக பதிவு செய்யாவிட்டால் கண் கருவிழி பதிவு மூலம் பொங்கல் பரிசு தொகையை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவு துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.
முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு உதவும் இந்த புதிய நடைமுறை, அரசின் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பொங்கல் பரிசு திட்டம் அனைவரையும் சென்றடைய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுதொகை ரூ.3,000 யார் யாருக்கு கிடைக்கும்?. தமிழக அரசு வெளியிட்ட தகவல்..!