#BREAKING NEWS # சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் மாற்றம்!
Tamil nadu health secretary transferred
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தற்போது ஜெ. ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணனை மீண்டும் அந்த துறைக்கு மாற்றப்பட்டதற்கு காரணம் அவர் 7 ஆண்டுகள் வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என கூறப்படுகிறது.