×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JUSTIN: தமிழகத்தை உலுக்கிய தஸ்வந்த் விடுதலை வழக்கு.. தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவு.. மரண தண்டனை உறுதி? 

Chennai News: தஷ்வந்துக்கு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

Advertisement

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை & கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்கிறது.

மரண தண்டனை:

சென்னையில் உள்ள பூந்தமல்லியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை & கொலை வழக்கில், தஸ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றவாளி தஸ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!

மனுதாக்கல்:

மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தஸ்வந்த் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

விடுதலை:

இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற அமர்வு, தஷ்வந்த்தை வழக்கில் இருந்து விடுதலை செய்து அறிவித்தது. இந்த தீர்ப்பை திருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

மேல்முறையீடு உறுதி:

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமி நாதன் அமர்வு, தமிழ்நாடு அரசு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை உறுதி செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் / வாரங்களில் வழக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #sexual abuse #Daswant Chennai #தஷ்வந்த் வழக்கு #சென்னை உயர்நீதிமன்றம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story