தமிழக அரசுப் பள்ளிகளில் 1,600 க்கும் மேல் புதிய வேலைவாய்ப்புகள்....! அரசாணையின் முக்கிய அறிவிப்பு..!!!
தமிழக அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை வலுப்படுத்த 1,328 உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 297 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய பணியிடங்களை உருவாக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அளிக்கப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: மகிழ்ச்சி செய்தி....தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு…!
அரசாணை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் பி. சந்திரமோகன் அரசாணையை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் உடல்நலம், விளையாட்டுத் திறன் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் நீண்டகாலமாக இருந்து வந்த உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
புதிய பணியிடங்களை உருவாக்குவதற்காக, பள்ளிக் கல்வி இயக்குநரின் தொகுப்பில் இருந்த சில பணியிடங்கள் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 275 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 34 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
மேலும், 555 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்களும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1,625 புதிய பணியிடங்களுக்கு ஒப்புதல்
சரண் செய்யப்பட்ட பணியிடங்களுக்கு ஈடாக தற்போது 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும், 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் விளையாட்டு சார்ந்த கட்டமைப்புகள் மேம்படுவதோடு, மாணவர்களுக்கு தரமான உடற்கல்வி பயிற்சி வழங்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா.? வருகிறது புதிய ரூல்ஸ்.. தயாரா இருங்க.!