" இனி புத்தகப் பை சுமை இல்லை "..! அரசுப் பள்ளியில் அறிமுகமாகும் புதிய கல்வி மாற்றம்....! மாணவர்களுக்கு அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி...!!!
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களை மையமாகக் கொண்ட புதிய கல்வி மாற்றங்கள் அமலாக உள்ளன. கணிதம் கதைகள் வழியாக கற்பித்தல், ஏஐ பயிற்சி, புத்தகப் பை சுமை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேலும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் நோக்கில் பல்வேறு புதிய கல்வி மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. கணிதத்தை கதைகள் மூலம் கற்பித்தல், புத்தகப் பை சுமையைக் குறைத்தல், ஏஐ தொழில்நுட்ப அறிமுகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
கதைகள் வழியாக கணிதம் கற்பிக்கும் புதிய முயற்சி
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர், குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக, மாணவர்கள் கணிதப் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கதைகள் மூலம் கற்பிக்கும் புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் விளக்கினார்.
இதையும் படிங்க: கடந்த 5 வருஷம் என்னதான் நடந்துச்சு! சீக்ரட் ஆர்டர் கொடுத்த CM.... அடுத்த வாரம் வெளியாகும்..! மொத்தமாக அம்பலப்படுத்தப் போகும் அரசு..!!!
புத்தகப் பை சுமை குறைப்பு, QR Code வசதி
மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைப்பதன் மூலம் அவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். பாடப் புத்தகங்களில் அதிகளவில் வண்ணப் படங்கள் இடம்பெறுவதுடன், அதில் இடம் பெறும் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து பாடங்களை காணொளி வடிவில் கற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.
AI பயிற்சி, செய்தித்தாள் வாசிப்பு, ஊழலற்ற நியமனம்
மாணவர்கள் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பெற்றோர் மற்றும் சமூகத்தை மதிக்கும் பண்புகளை வளர்க்கும் கல்வி முறையே அரசின் இலக்காக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், கல்வித் துறையில் ஊழலை முற்றிலும் ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி சொன்ன CM விஜய்! இனி சாப்பாடு வேற லெவல்ல இருக்கும்... விரைவில் வெளியாகப்போகும் புதிய லிஸ்ட்..!!!