×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!.. பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு அதிரடி முடிவு..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!.. பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு அதிரடி முடிவு..!

Advertisement

பொங்கல் பரிசாக தமிழக அரசு இந்த வருடம் ரூ.1000 வழங்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக பணம் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த வருடம் பொங்கலுக்கு பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பை கரும்புடன் வழங்கப்பட்டது. 

இந்த தொகுப்பில் இருந்த உருண்டை வெல்லம் பல இடங்களில் தரமற்ற வெல்லம் வழங்கப்பட்டதால் புகார்கள் எழுந்தன. பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக விமர்சித்தனர். எனவே வருகிற பொங்கல் திருநாளுக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதிலாக  ரூ.1000 பணமாக கொடுக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. 

வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசி, கரும்பு போன்ற பொருட்களுடன் 1000 ரூபாய் பணம் வழங்க முடிவு செய்துள்ளததாக தெரிகிறது. மேலும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாமா அல்லது நியாய விலை கடைகளில் வழங்கலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது.

மக்களுக்கு வழங்க பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இதுவரை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்படவில்லை. எனவே இந்த வருடம் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்க வாய்ப்பு இல்லை. அதனால் வழக்கமாக வழங்கப்படக்கூடிய பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #pongal festival #Pongal 2023 #Tn govt #pongal gift
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story