தமிழக சிறுமிகளுக்கு இலவச தட்டுப்பூசி திட்டம்! ஒரு தடுப்பூசியோட விலை ₹14,000! கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழகத்தில் சிறுமிகளுக்கான இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பில் புதிய மைல்கல்.
பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு ஒரு முக்கியமான சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நோய்களில் ஒன்றான கருப்பை வாய் புற்றுநோய்யைத் தடுக்கும் வகையில் சிறுமிகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் தொடங்கி வைத்த முக்கிய முயற்சி
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 27ஆம் தேதி இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழகமெங்கும் 14 வயதுக்குட்பட்ட சுமார் 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தனியாரில் விலை உயர்ந்த தடுப்பூசி
தனியார் மருத்துவமனைகளில் இந்த Cervical Cancer தடுப்பூசியை செலுத்துவதற்கு சுமார் ரூ.14,000 வரை செலவாகும் நிலையில், அரசு முழுமையாகச் செலவினத்தை ஏற்று இலவசமாக வழங்குவது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! இன்று முதல் மாதந்தோறும் ரூ.2000! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு....
மாநிலம் முழுவதும் விரிவாக்கம்
முதற்கட்டமாக சிறுமிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் நீண்டகால ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் இது ஒரு முன்னோடி நடவடிக்கையாக கருதப்படுகிறது.
சுகாதார துறையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இலவச தடுப்பூசி திட்டம் மூலம் வருங்கால தலைமுறைக்கு பாதுகாப்பான ஆரோக்கிய வாழ்வு உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!