BREAKING : அதிர்ச்சி! என்னோட ஓட்டை யாரோ போட்டுட்டாங்க.... அடுத்தடுத்து பெண்கள் அதிரடி புகார்! சர்கார் பட பாணியில் பரபரப்பு வீடியோக்கள்....!!!
தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மதுரவாயல் பகுதியில் பெண் வாக்காளர் ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நிற்கும் சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் சில இடங்களில் ஓட்டு தொடர்பான புகார்கள் எழுந்து கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக ஒரு பெண் வாக்காளர் தனது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
மதுரவாயலில் பரபரப்பு
சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் உமா மகேஸ்வரி என்ற பெண் வாக்களிக்க வந்தார். ஆனால், தனது பெயரில் ஏற்கனவே வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார்.
போலீசாருடன் வாக்குவாதம்
தான் கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என்று வலியுறுத்திய அவர், அங்கு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு இருந்தவர்கள் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: BREAKING: நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த அதிமுக முன்னாள் MLA! பட்டபகலில் நடந்த பயங்கரம்! பரபரப்பு வீடியோ...!
தொடர்ச்சியான புகாரால் பதற்றம்
இதையடுத்து, இதேபோல் இன்னும் சில பெண்களும் தங்களது ஓட்டு மற்றொருவரால் போடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக ஓட்டு புகார் தொடர்ந்து எழுந்ததால் அந்த பகுதியில் சிறிய அளவில் பதற்றம் நிலவியது. அதிகாரிகள் நிலையை சமாளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.