முன்னிலையில் தவெக.. எம்.ஜி.ஆர் காலத்துக்கு பின்.. தமிழக தேர்தலில் கவனம் ஈர்த்த விஜய்..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி தொடங்கிய சில காலங்களிலேயே அதிக இடங்களில் முன்னிலை வகித்த பெருமையை தவெக பெற்றுள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து மே 4-ம் தேதியான இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 85 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன.
வெற்றிபெறப்போவது யார்?
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி நிலவிய நிலையில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட 4023 வேட்பாளர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து 2026 தேர்தலில் யார் வெற்றிப்பெற போகிறார்கள்? என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!
தவெக முன்னிலை:
தற்போதைய சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தவெக முன்னிலை வகித்து வருவதால், இந்த தேர்தல் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஜி.ஆருக்கு பின்:
இந்த நிலையில் தற்போது வரை தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 66 இடங்களிலும், திமுக 61 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கட்சியாக தவெக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING! வேற லெவல்..... தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலிடம்! அதிமுக திமுகவுக்கு பின்னடைவு..!!!