தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி 20 மாநாடு; ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார்...!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி 20 மாநாடு; ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று டெல்லி செல்கிறார்...!!

Tamil Nadu Chief Minister M.K.Stalin G20 Conference; Going to Delhi today to attend a consultative meeting... Advertisement

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று டெல்லி பயணம்.

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கிறது. எனவே, அடுத்த வருடம் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை மிக சிறப்பாகவும், வெற்றிகரமாகம் நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, ஜி20 கூட்டம், தமிழகத்தில் சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்காக, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால், இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு இரவே அவர் சென்னை திரும்ப இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #chief minister #MK Stalin #G20 Conference #Going to Delh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story