×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதல்வர் விஜய் போட்ட அந்த கையெழுத்து...! ஆளுநர் அர்லேகர் அளித்த ஒப்புதல்! இனி 21 நாட்களில் தமிழகத்தில் எல்லாமே மாறுது....! தவெக அரசின் அதிரடி மூவ்....!!!

தமிழ்நாடு வணிக எளிதாக்கல் திருத்தச் சட்டம் 2026க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தொழில் அனுமதிகளுக்கு 21 நாள் காலக்கெடும், முதலீட்டு ஆணையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய திட்டங்களுக்கான அனுமதிகளை விரைவுபடுத்தவும் கொண்டுவரப்பட்ட வணிக எளிதாக்கல் திருத்தச் சட்டம் 2026 அமலுக்கு வந்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தொழில் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

தொழில் அனுமதிகளுக்கு 21 நாள் காலக்கெடு

புதிய சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக, குறிப்பிட்ட சில மாநில சட்டங்களின் கீழ் தொழில் திட்டங்களுக்கான ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு 21 நாள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 நாட்களுக்கு மேல் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலவரம்பு குறிப்பிடப்படாமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட அனுமதிகள் பொதுவாக 21 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. பொது மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படாது.

இதையும் படிங்க: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கி கணக்கு முறையில் மாற்றம்...! தமிழகம் முழுவதும் உதவித்தொகை நிறுத்தம்? அரசு நிதியுதவி பெற அல்லேலப்படும் மக்கள்...!!!

முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கம்

பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டு திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைவராகவும், தொழில்துறைச் செயலாளர் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார். அரசால் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம்; தேவைக்கேற்ப முதலீடு, தொழில், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 5 நிபுணர்கள் வரை வாக்களிக்கும் உரிமையில்லாத சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கலாம்.

ரூ.200 கோடி முதலீடு முதல் 5,000 வேலைவாய்ப்பு திட்டங்கள் வரை

ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடு கொண்ட திட்டங்கள், குறைந்தது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் முதலீடுகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆணையம் கண்காணிக்கும். திட்டம் தொடங்குவதற்கு முன்பான பணிகள் முதல் வணிக உற்பத்தி தொடங்கும் நிலை வரை முன்னேற்றத்தை ஆய்வு செய்து, தேவையான அனுமதிகள் மற்றும் சலுகைகள் கிடைப்பதை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும். பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில் நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டையும் மறுஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: மக்களே அலெர்ட்..! உருவான புதிய புயல்... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழ்நாடு வணிக எளிதாக்கல் #Business Facilitation Act #முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் #21 நாள் அனுமதி #Tamil Nadu Investment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story