BREAKING: மகிழ்ச்சி செய்தி! மாத ஊதியம் ரூ.20000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்வு....! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் கலை, பண்பாட்டுத் துறை கல்லூரி தொகுப்பூதிய ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞர்களுக்கான நிதியுதவியும் அதிகரிப்பு.
தமிழகத்தில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்களின் மாத ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000 ஊதிய உயர்வு
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி அரசு நடத்தும் இசை மற்றும் கவின்கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.5,000 கிடைக்கும்.
இதையும் படிங்க: இன்ப அதிர்ச்சி... 234 சட்டமன்ற தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக ரூ.828. 36 கோடி ஒதுக்கீடு....! அதிரடி காட்டும் முதல்வர் விஜய்!!!
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நிதியுதவி இரட்டிப்பு
இதனுடன், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நலத்திட்டத்திலும் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் தங்களுக்குத் தேவையான இசைக்கருவிகள் மற்றும் ஆடைகளை வாங்குவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டுப்புறக் கலைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் கலைஞர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும்.
மேலும் 1,500 கலைஞர்களுக்கு மாத உதவித்தொகை
நலிவடைந்த கலைஞர்களுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ரூ.3,000 உதவித்தொகைத் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு முதல் கூடுதலாக 1,500 கலைஞர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். ஒரே அறிவிப்பில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதுடன், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வர் அலுவலகத்தை மாற்ற கோடி கோடியாய் ஆகும் செலவு! எத்தன்னை கோடி தெரியுமா? கசிந்த தகவல்!!!