×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்றுமட்டும் இவ்வளவு கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு.? மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Tamil Nadu and Chennai today corona latest update

Advertisement

தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பருவ தொடங்கியதிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1084 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 96 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோயினால் இறந்தவர்க்ளின் மொத்த எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக ஒரே இன்று நாளில் 6031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கோரணா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 52,379 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamil nadu #chennai
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story