உச்சக்கட்ட எதிர்பார்பில் விவசாயிகள்! பயிர்க்கடன் தள்ளுபடி... பட்ஜெட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்...! தமிழக அரசின் அடுத்து வெளியாகும் அறிவிப்புகள்...!!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி, விதைப்புக் கால நிதி உதவி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து இன்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் முதல் வேளாண் பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது கவனிக்கப்படுகிறது.
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு அதிக எதிர்பார்ப்பு
விவசாயிகள் அதிகம் எதிர்பார்க்கும் அறிவிப்பாக பயிர்க்கடன் தள்ளுபடி பார்க்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் பிப்ரவரி 28 வரை பெறப்பட்ட அனைத்து வகை பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உழவர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, அதற்கு மேற்பட்டோருக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அமல்படுத்தப்பட்ட வரம்புகள் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
இதையும் படிங்க: சற்று முன்.... கடன் முழுவதும் தள்ளுபடி...! தமிழக மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!!
விதைப்புக் கால நிதி உதவிக்கு காத்திருக்கும் உழவர்கள்
சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும் விதைப்புக் கால நிதி உதவி திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி ஆகிய இரு பருவங்களில் தலா ரூ.7,500 வீதம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உதவி, சாகுபடியின் தொடக்கச் செலவைக் குறைக்க உதவும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
உயர்கல்வி திட்டமும் கவனத்தில்
இதனுடன், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் திட்டம் குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தகவலின்படி, வேளாண் பட்ஜெட் வரைவு நகலுடன் அமைச்சர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தது அரசியல் ரீதியாக பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் விவசாயிகளின் கவனம் முழுவதும் வாழ்வாதார அறிவிப்புகள் மீதே உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு ஏற்ப இன்றைய நிதிநிலை அறிக்கை அமையுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவர உள்ளது.
இதையும் படிங்க: அதிர்ச்சி... பயிர்க்கடன் தள்ளுபடி சிறு வித்தியாசத்தால் நாகை விவசாயி உயிரிழப்பு..! முதல்வர் விஜய்யின் தள்ளுபடி வரம்பால் சிக்கல்...!!!