×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீங்களும் பகிரலாமே! ஏழை மாணவர்களுக்காக நடிகர் சூர்யா விடுத்த வேண்டுகோள்.!

surya request to teachers for identify the poor students

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்கள் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன்கள்  சூர்யா மற்றும் கார்த்தி. பல வெற்றி படங்களில் நடித்த இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நடிப்பு மட்டுமின்றி, வறுமையால் கல்வி கற்க முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திய ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்க அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த அகரம் அறக்கட்டளை மூலம் வறுமையால் கல்வி கற்க முடியாமல் இருக்கும் ஏழை மாணவ-மாணவிகள் மேற்படிப்பு படிக்க தேவையான  கல்வி கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.மேலும் அவர்கள் தங்கி படிப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் இலவச கல்வி வழங்க தகுதியான வறுமையில் வாடும் ஏழை மாணவர்களை அடையாளம் காணும் பணி  தற்போது நடைபெற்று வருகிறது. ஆவ்வாறு மாணவர்களை அடையாளம் காண அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

                

மேலும் இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர் கல்வி பெற அகரம் பவுண்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

 2019-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 

வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாக கல்வியை தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்காணும் அகரம் பவுண்டேசன் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிளஸ் டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதி போடும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி 80561 34333 ,              98418 91000 இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.



 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#surya #Karthi #akaram foundation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story