தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சத்தமின்றி கணவரை கொன்று விட்டு விடிய விடிய சடலத்துடன் மனைவி செய்த செயல்! கடைசியில் அம்பலமான உண்மை

Suresh anushiya murder

Suresh anushiya murder Advertisement

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் -அனுசியா தம்பதியினர். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் சந்தித்த போது அது காதல் மலர்ந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லோகேஷ் என்ற நான்கு வயது மகன் உள்ளான்.

இந்நிலையில் சுரேஷ் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அனுசியா பட்டப்படிப்பு முடித்திருந்ததால் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். சுமுகமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் திடீரென சுரேஷ்க்கு அனுசியா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

suresh

இதனால் சுரேஷ் குடித்துவிட்டு வந்த தனது மனைவியை அடித்து கொடுமை செய்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அனுசியா தனது கணவருக்கு இரவு சாப்பிடும் தோசையில் மயக்கமருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.

பின்னர் தனது ஆண் நண்பரின் உதவியுடன் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல் கணவருடன் உறங்கி விட்டு காலை எழுந்து கத்தியுள்ளார்.அதன்பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

போலீசார் வந்த கேட்ட போது தனது கணவர் குடிபோதையில் இறந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் சுரேஷ்சின் கழுத்தில் காயம் இருந்ததை கவனித்த போலீஸ் அதிகாரிகள் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு தவற்றை ஒப்புக் கொண்டுள்ளார். போலீசார் அனுசியா மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suresh #Anushiya #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story