தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பசுமைக் காவலராக களமிறங்கிய மு.க.ஸ்டாலின்! அடுத்த தலைமுறைகக்கான விதை

Stalin sponsored plants in kolathur

Stalin sponsored plants in kolathur Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார். 

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர் கொளத்தூர் சட்டமன்ற தொகுததியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 ஆம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரை விட 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலிலும் ஸ்டாலின் இதே தொகுதியில் தான் வெற்றி பெற்றார். 

Stalin sponsored plants in kolathur

7 ஆண்டுகளாக இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் ஸ்டாலின் அந்த தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இதன் மூலம் அந்த தொகுதி மக்களோடு நெருக்கமாகவும் ஸ்டாலின் இருந்து வருகிறார். 

இந்நிலையில் இன்று கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் ஸ்டாலின் கலந்துகொன்டார். அப்போது அவர் பசுமையை மேம்படுத்துவது பற்றி உரையாற்றினார். மேலும் முதியவர் ஒருவருக்கு பசுமைக் காவலர் விருதினை வழங்கினார். 

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள், மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள்  பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பாதுகாப்பு வளையத்துடன் 1000 மரக்கன்றுகளை தொகுதி மக்களுக்கு அளித்த ஸ்டாலின் மரம் நடும் விழாவையும் துவங்கி வைத்தார். 

மழை பெய்ய துவங்கியிருக்கும் இந்த சரியான நேரத்தில் ஸ்டாலினின் இந்த திட்டம் பெரிதும் வரவேற்கப்படுகிறது. மேலும் இவ்விழாவில் பேசிய அவர் “நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை!” என்றும் ஒருவருட காலமாக முறையாக மரக்கன்றுகளை பராமரித்து வருபவர்களை பாராட்டி பரிசுகளையும் வழங்கினார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Stalin sponsored plants in kolathur #MK Stalin #Kollathur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story