×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனை பிரிந்து வீட்டில் தனியாக இருந்த தாய்! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

son shocked for his mom death

Advertisement


நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் விவசாயியான இவருக்கும் உமா என்பவருக்கும் திருமணமாகி ஆகாஷ், அபிஷேக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக உமா தனது கணவனை பிரிந்து மகன்களுடன் வசித்துவந்துள்ளார்.

உமாவின் மூத்த மகன் ஆகாஷ் கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார். இளைய மகன் அபிஷேக் படித்துக்கொண்டே இரவு நேரங்களில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அபிஷேக் வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது உமா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அபிஷேக் அலறல் சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உமாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணம், நகைக்காக உமா கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mom killed #son shocked
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story