வேலைக்குப் போகச் சொன்னது குற்றமா? தாயை அடித்துக் கொன்ற மகன்; தடுக்க வந்த மனைவிக்கும் அடி!
வேலைக்குப் போகச் சொன்னது குற்றமா? தாயை அடித்துக் கொன்ற மகன்; தடுக்க வந்த மனைவிக்கும் அடி!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (38). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர், கடந்த 6 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால், மகனின் எதிர்காலம் குறித்து கவலை அடைந்த அவரது தாய் தனலட்சுமி (51), நேற்று இரவு முனுசாமியைக் கண்டித்துள்ளார். இதனால் தாய்-மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவைக் கடந்தும் வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரமடைந்த முனுசாமி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தாய் தனலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மருமகள் மீனா, அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த முனுசாமி, மீனாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி மற்றும் மீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பெத்த அப்பாவே மகளுக்கு செய்யுற காரியமா இது? வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! தம்பதிகள் மீது தகப்பன் செய்த வெறிச்செயல்... கொடூர சம்பவம்!!!
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக இருந்த முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து முனுசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்குச் செல்லாமல் இருந்த மகனை தாய் கண்டித்ததால் ஏற்பட்ட தகராறு, அவரது உயிரைப் பறித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Ex மினிஸ்டரின் மகன் குத்திக்கொலை.. சொந்தங்களுக்குள் நடந்த பஞ்சாயத்தில் பயங்கரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு.!