×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெண்ணிலா.. யாரோ இரண்டுபேர்.. நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி..

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி வெண்ணிலா(48). வெண்ணிலா நேற்று முன்தினம் இரவு தனது குடுபத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி மர்மநபர்கள் இரண்டுபேர் வெண்ணிலாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் சென்ற அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். யாரோ தனது சங்கிலியை பறிப்பதை உணர்ந்த வெண்ணிலா தூக்கத்தில் இருந்து கண்விழித்து எழுந்தபோது தனது அருகில் இரண்டுபேர் இருப்பதை கண்டு திருடன் திருடன் என கத்தியுள்ளார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர்களை பிடிப்பதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகியுள்ளனர்.

வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றதாகவும், அதன் மதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story