மின்னல் வேகத்தில் உயரவிருக்கும் மொபைல்போன்கள் விலை.! என்ன காரணம்.?
smart phone rate will increased

இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு வளர்த்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே, நம்மிடம் எது இருந்தாலும், இல்லையென்றாலும் ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கும். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், செல்போன்களுக்கான டிஸ்பிளேக்களை இறக்குமதி செய்வதற்கு அரசு 10 சதவீத வரி விதித்துள்ளதால், செல்போன்களின் விலை 3 சதவீதம் உயரும் என்று தொழில்துறை அமைப்பான ஐசிஇஏ தெரிவித்துள்ளது.
இந்த வரிவிதிப்பு காரணமாக செல்போன்கள் போன்கள் விலையில் 1.5 முதல் 3 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தலைவர் தெரிவித்துள்ளார். ஐசிஇஏ உறுப்பினர்களில் ஆப்பிள், ஹவாய், சியோமி, விவோ மற்றும் வின்ஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
இந்த வரிவிதிப்பிற்கான கரணம், உள்நாட்டில் செல்போன் டிஸ்பிளேக்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு இறக்குமதியை குறைப்பதற்கும் வரிவிதிப்பு அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.