×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை காதலித்த இளைஞர்களை கொடூரமாக கொன்ற தந்தை.. திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்.!

Sivakasi News: 2 நபர்களை தந்தை அடுத்தடுத்து கொலை செய்ததற்கான காரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

2 கொலை செய்த தந்தை கொடுத்த வாக்குமூலம் அதிரவைத்துள்ளது.

கழுத்தறுத்து கொலை:

Virudhunagar Crime News: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, செவலூர் மேலத்தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 28). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சிவகாசி, கொத்தனேரி கண்மாயில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

2 பேர் கைது:

இந்த விஷயம் குறித்து எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, செவலூரைச் சேர்ந்த கில்லாடி சுரேஷ் (வயது 46), மதுரை விளாங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதிர்ச்சி தகவல்:

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கைதான சுரேஷின் 17 வயது மகளை பிரபாகரன் காதலித்து வந்துள்ளார். இதனால் மதுபானம் அருந்தலாம் என அழைத்துச்சென்று பிரபாகரன் சுரேஷால் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 26) என்பவரை பிரபாகரன் கொலை செய்துள்ளார். முந்தைய கொலையில் கைதாகி சிறையில் இருந்தபோது விக்னேஷுடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அவரும் கொலைக்கு உடந்தையாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காதல் திருமணத்தால் கோபம்? மருமகனை காலி செய்த மாமனார்.. வன்மத்துடன் வெறிச்செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Virudhunagar #Crime #கொலை #காதல் விவகாரம் #சிவகாசி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story